கூட்டணி விவகாரம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025
கூட்டணி விவகாரம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்
பாஜக கூட்டணியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகிய டிடிவி தினகரன், தான் கூட்டணியில் இருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் இதனை நயினார் நாகேந்திரன் மறுத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது;
"எனக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே தனிப்பட்ட விதத்தில் பிரச்சினை இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேற நான்தான் காரணம் என டிடிவி தினகரன் எதன் அடிப்படையில் கூறுகிறார்? திடீரென என் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பலமுறை பேசியபோதும் அவர் என்னிடம் எந்த கருத்தையும் சொல்லவில்லை. டிடிவி தினகரன் பேசியது மன வருத்தம் தருகிறது என கூறினார்.
Update: 2025-09-08 07:08 GMT