புதிய துணை ஜனாதிபதி யார்.. இன்று தேர்தல் - முடிவு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
புதிய துணை ஜனாதிபதி யார்.. இன்று தேர்தல் - முடிவு எப்போது தெரியும்?
துணை ஜனாதிபதி தேர்தல் இன்று பாராளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்-101 என்ற அரங்கில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக மேல்சபை செயலாளர் பி. சி. மோடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓட்டுப்பதிவை கண்காணிப்பார்.
ஓட்டு போடுவதற்காக அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் டெல்லிக்கு சென்று வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
Update: 2025-09-09 03:22 GMT