இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி
சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
*இந்தியாவின் 15ஆவது துணை ஜனாதிபதியாகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன்
* துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் செப்.12ம் தேதி பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
வன்முறை எதிரொலியாக நேபாள பிரதமரை தொடர்ந்து நேபாள அதிபர் ராம் சந்திர பவுடேல் ராஜினாமா செய்தார்.
துணை ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் எகிறும் எதிர்பார்ப்பு. துணை ஜனாதிபதி தேர்தலில் 386 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார்.
திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. சாலைவலம் நடத்தக்கூடாது என காவல் துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செப்.13ல் திருச்சியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கிறார் தவெக தலைவர் விஜய்.அக்4, கோவை, அக்.11 நெல்லை, அக்.18 காஞ்சிபுரம், அக்.25-ம் தேதி சென்னையில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டிச.20 வரை நடைபெறும் சுற்றுப்பயணத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது.
நேபாளத்தில் போராட்டத்தை கைவிட வேண்டும் என அந்நாட்டின் ராணுவத் தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டக்காரர்களின் கோரிக்கைப்படி பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், ராணுவத் தளபதி உள்ளிட்டோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை அமித் ஷாவிடம் முன்வைத்தேன். தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதையும் அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன். எங்களை பொறுத்தவரை அதிமுக என்ற இயக்கம் வலுப்பெற வேண்டும் என்பதுதான் நோக்கம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது. மொத்தம் உள்ள 782 வாக்குகளில் 12 பேர் புறக்கணித்துள்ளனர். எதிர்பார்க்கப்படும் மொத்த வாக்குகள் 770 ஆகும். எஞ்சியுள்ள 8 பேர் விரைவில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்டு வக்கீல் வெங்கிட சிவகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையத்துக்கு எதிரான இந்த வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு. விளம்பர நோக்கத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.