காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 வீரர்கள் வீர மரணம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 வீரர்கள் வீர மரணம் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷமீரின் குலகாம் மாவட்டத்துக்கு உட்பட்ட கடார காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் காஷ்மீர் போலீசாரைக்கொண்ட கூட்டுப்படையினர் நேற்று அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி வீரர்கள் முன்னேறியபோது. அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2025-09-09 03:39 GMT

Linked news