கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம்:... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025

கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம்: இன்று ரோடு ஷோ செல்கிறார்


இன்று (செவ்வாய்க்கிழமை) எடப்பாடி பழனிசாமி கோவையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.

அவர் மாலை 4.45 மணிக்கு செல்வபுரத்தில் ரோடு ஷோ செல்கிறார். 5.30 மணிக்கு தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அங்கிருந்து ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாக குனியமுத்தூர் சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.


Update: 2025-09-09 04:37 GMT

Linked news