புதிய துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
புதிய துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
புதிய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லி நாடாளுமன்றத்தில் தொடங்கி உள்ளது. தே.ஜ.கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், 'இந்தியா' கூட்டணி சார்பில் சுதர்ஷன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். துணை ஜனாதிபதி தேர்தலில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ.கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இரு அவையில் மொத்தமுள்ள 788 உறுப்பினர்களில் 7 இடங்கள் காலியானது போக வேட்பாளரின் வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை. தே.ஜ.கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Update: 2025-09-09 04:46 GMT