காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்த உத்தரவுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்த உத்தரவுக்கு எதிராக காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் ஏதோ ஒன்று வழக்கத்துக்கு மாறாக நடந்துள்ளது என்றும் நீதிபதி என்.சதீஷ்குமார் தெரிவித்தார்.
Update: 2025-09-09 05:55 GMT