இந்தியா - இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-07-2025
இந்தியா - இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
Update: 2025-07-10 03:46 GMT