குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் 45... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-07-2025

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் 45 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. வதோதரா நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்த இந்த பாலம், மாவட்டத்தின் முஜ்பூர் மற்றும் கம்பீரா பகுதிகளை இணைக்கிறது. சவுராஷ்டிரா பகுதியையும் கூட இந்த பாலம் இணைக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தில் சென்று கொண்டிருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மகிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன. இந்நிலையில், குஜராத்தில் ஏற்பட்ட பால விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2025-07-10 05:31 GMT

Linked news