தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025

தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.5,640 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன..?

இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 150-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒருபுறம் தங்கம் விலையும், மற்றொரு பக்கம் வெள்ளி விலையும் ‘கிடுகிடு'வென அதிகரித்து வரும் சூழலில், இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.140-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. 

Update: 2025-09-10 04:36 GMT

Linked news