கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளகெவி, வட்டக்கானல் உள்ளிட்ட கொடைக்கானல் வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் இன்று காலை கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Update: 2025-09-10 04:42 GMT