அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆடிட்டர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்த தகவல் தவறானது - அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிகத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ள தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கையை விட, இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். இதன்படி தமிழகத்தில் 2025-26ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ்வழி கல்வியில் 70 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், இந்தி பிரச்சார சபாவில் 80 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், “ஆடிட்டர் தெரிவித்துள்ள தகவல் தவறானது. 2025-26ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 769 பேர் சேர்ந்துள்ளனர். 70 ஆயிரம் அல்ல. ஆடிட்டர் குருமூர்த்தி பகிர்ந்த தகவல் தவறானது” என்று அதில் தெரிவித்துள்ளார்.