திருமண நிதியுதவி திட்டம்: தங்க நாணயங்களை கொள்முதல்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025

திருமண நிதியுதவி திட்டம்: தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர்

தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையால் செயல்படுத்தப்படும் 4 திருமண நிதியுதவி திட்டங்களுக்கு 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஏழைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்கள் ஆகியோருக்கு வழங்க 22 காரட்டில் 8 கிராம் தங்க நாணயங்கள் ரூ.45 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.

Update: 2025-09-10 07:15 GMT

Linked news