ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது -உச்சநீதிமன்றம்
ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஊர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்ட மாணவர்கள் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை (14-ம் தேதி) அன்று நடைபெற உள்ள நிலையில் இதனை அவசர வழக்காக எடுத்து கொண்டு நாளையே விசாரிக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த போட்டியை ரத்து செய்ய முடியாது திட்டமிட்டபடி நடைபெறும் என்று தீர்ப்பளித்துள்ளனர். அத்துடன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.