டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, அனுமன் ஜெயந்தியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். கரோல் பாக் நகரில் உள்ள சித் அனுமன் கோவிலில் இன்று சாமி தரிசனமும் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், அனைத்து டெல்லிவாசிகளுக்கும் நான் வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன்.
ரொட்டி அல்லது எந்தவொரு உணவையோ சாலையில் தூக்கி எறியாதீர்கள். விலங்குகளுக்கு அன்புடன் உணவு வழங்குங்கள். ஆனால் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய கலாசாரம் மீது மதிப்பு வைத்திடுங்கள். உங்கள் சாலைகளை பாதுகாப்பாக வைத்திருங்கள் என பதிவிட்டு உள்ளார்.
Update: 2025-04-12 09:42 GMT