திருவண்ணாமலையில் பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025
திருவண்ணாமலையில் பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நாளான இன்று கிரிவலம் செல்ல அதிகாலை 4.15 மணிக்கு (இன்று 12ம் தேதி) தொடங்கி நாளை அதிகாலை 6.08 மணிவரை உகந்த நேரம் என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், பவுர்ணமி நாளை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலை தொடங்கி, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி, திருவண்ணாமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Update: 2025-04-12 10:44 GMT