நாடு முழுவதும் யுபிஐ சேவை இன்று பாதிக்கப்பட்டது.... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025

நாடு முழுவதும் யுபிஐ சேவை இன்று பாதிக்கப்பட்டது. காலை 11 மணி முதல் யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பயனாளர்கள் பண பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பயனாளர்கள் அவதியடைந்தனர். இந்த முடக்கம், உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது, மின் கட்டணம் செலுத்துவது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் அனுப்புவது போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு யுபிஐ செயலியை நம்பியிருக்கும் மக்களை வெகுவாக பாதித்தது.

Update: 2025-04-12 11:01 GMT

Linked news