ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் குஜராத்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்தது. லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ களமிறங்கியது. 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 186 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
Update: 2025-04-12 13:58 GMT