தெருநாய்களை அகற்ற வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

தெருநாய்களை அகற்ற வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு ராகுல் காந்தி அதிருப்தி

காங்கிரஸ் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட்டு அளித்த உத்தரவு, மனிதாபிமான, அறிவியல் சார்ந்த கொள்கைகளுக்கு பின்னடைவு. அவைகளை அகற்றும் முடிவு கொடூரமானது.

காப்பகங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகியவை மூலம் பொது பாதுகாப்பையும் விலங்குகள் நலனையும் ஒருசேர உறுதி செய்ய முடியும். இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய "பிரச்சினைகள்" அல்ல.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-12 07:57 GMT

Linked news