இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-08-12 09:14 IST


Live Updates
2025-08-12 11:27 GMT

திரைத்துறையில் 50 ஆண்டுகள்: ''கேப்டன் இருந்திருந்தால்...'' - ரஜினிக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தமிழ் திரையுலகம் ஒன்றிணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என அவர் தெரிவித்திருகிறார்.

2025-08-12 08:01 GMT

17ம் தேதி பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ் அவசர ஆலோசனை

பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு பொதுக்குழு வரும் 17-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் தனது தரப்பு முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2025-08-12 07:57 GMT

தெருநாய்களை அகற்ற வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு ராகுல் காந்தி அதிருப்தி

காங்கிரஸ் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட்டு அளித்த உத்தரவு, மனிதாபிமான, அறிவியல் சார்ந்த கொள்கைகளுக்கு பின்னடைவு. அவைகளை அகற்றும் முடிவு கொடூரமானது.

காப்பகங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகியவை மூலம் பொது பாதுகாப்பையும் விலங்குகள் நலனையும் ஒருசேர உறுதி செய்ய முடியும். இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய "பிரச்சினைகள்" அல்ல.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-08-12 07:46 GMT

அரசுக்கு சொந்தமான கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க குழு அமைப்பு

ஊராட்சிகளுக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது.

வாடகை நிலுவை, இடப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் வகையில் 7 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெற உள்ளனர்.

2025-08-12 07:42 GMT

தூய்மை பணியாளர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு

தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். கிட்டத்தட்ட 300 பேர் மீண்டும் பணிக்கு வந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், வழக்கை முடித்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருவதாக தூய்மை பணியாளர்கள் கூறினர். நேற்றுக்கூட அனைவரிடமும் பேசிவிட்டு தான் வந்துள்ளேன். சுமூகமாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்” என்று தெரிவித்தார்.

2025-08-12 07:39 GMT

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


ஆவடியில் 22-ந் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


2025-08-12 07:33 GMT

டிடிஎப் வாசன் மனு தள்ளுபடி

ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎப் வாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஒட்டியதாக வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

2025-08-12 07:27 GMT

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்..? - கேள்வி எழுப்பிய அன்புமணி


பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில், “பழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.

முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

2025-08-12 07:11 GMT

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: அரசுக்கு எதிராக போலி பிம்பம் கட்டமைப்பு - ஐகோர்ட்டில் விளக்கம்


தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி தொடரப்படும் வழக்கை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவச்தவா, நீதிபதி சுந்தர்மோகன் முன்பு நேற்று காலையில் வக்கீல் வினோத் என்பவர் முறையிட்டார்


Tags:    

மேலும் செய்திகள்