கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்
கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை தற்காலிகமாக சேவை நிறுத்தப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே காலை 5 மணி முதல் 6 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் தொடங்கும். வாரநாள், சனிக்கிழமை, ஞாயிறு கால அட்டவணை பின்பற்றப்பட உள்ளது.
Update: 2025-09-12 03:38 GMT