அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்திற்கு புறப்பட்டார் விஜய்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தவெக தலைவர் விஜய், தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
Update: 2025-07-13 04:32 GMT