3 மணி நேரத்தில் ரெயில் டேங்கர் தீ அணைக்கப்படும் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025

3 மணி நேரத்தில் ரெயில் டேங்கர் தீ அணைக்கப்படும் - தீயணைப்புத்துறை தகவல்


திருவள்ளூரில் ரெயில் தடம்புரண்டு தீப்பற்றி எரியும் டீசல் டேங்கர்கள் 3 மணி நேரத்தில் அணைக்கப்படும் என்று தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 7 மணி நேரமாக தீப்பற்றி எரியும் நிலையில் இன்னும் 2 டீசல் டேங்கர்களில் தீ அணைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைப்பது சிரமமாக உள்ளதால் ரசாயனக் கலவை பயன்படுத்தப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையின் 15 அதிகாரிகள் உள்பட 85 பேர் ஈடுபட்டுள்ளனர்

ஹூண்டாய் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் தீயணைப்பு வாகனங்களும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2025-07-13 07:00 GMT

Linked news