ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்டு மத்திய அரசு கடிதம்
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளை அறிய மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், இந்த கருத்து கேட்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2029-ம் ஆண்டு முதல் மக்களவை மற்றும் மாநில சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2026-01-14 07:56 GMT