சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 7-வது நாளாக தர்ணா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025

சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 7-வது நாளாக தர்ணா போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகம் அருகில் இன்று 7-வது நாளாக, பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதாகைகள் ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் நடுவே, (போராட்ட களத்தில் இருந்து) பகுதி நேர ஆசிரியர்கள் திடீரென சாலையை நோக்கி ஓடி, சாலையின் நடுவே அமர்ந்தும், சாலையில் படுத்தும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் சிலர், இந்த பகுதியில் சென்ற அரசு பேருந்தை மறித்து, பேருந்தின் முன்பு சாலையில் படுத்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதனால், போலீசார் விரைந்து சென்று அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர். ஆயினும் சில ஆசிரியர்கள் போலீசாரிடம் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்யும் விதமாக போலீஸ் பஸ்சில் ஏற்றினர்.

Update: 2025-07-14 11:51 GMT

Linked news