மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: தென் கொரியாவுக்கு எதிராக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: தென் கொரியாவுக்கு எதிராக சீனா வெற்றி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா


சூப்பர்4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீனா-தென் கொரியா அணிகள் மல்லுக்கட்டின. ஏற்கனவே இறுதிப்போட்டியை உறுதி செய்து விட்ட சீனாவை குறைந்தபட்சம் 2 கோல் வித்தியாசத்தில் வீழ்த்தினால் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் தென் கொரியா களம் இறங்கியது.

இத்தகைய பரபரப்பான சூழலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சீன அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அதிர்ஷ்டம் கிட்டியது.


Update: 2025-09-14 04:38 GMT

Linked news