துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு காளை சிற்பத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026

துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு காளை சிற்பத்தை பரிசளித்தார் நடிகர் சூரி


பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு நடிகர் சூரி காளை சிற்பத்தை பரிசளித்தார்.

Update: 2026-01-16 05:24 GMT

Linked news