இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கம்
இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இவை ஏ.சி. இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் அம்ரித் பாரத் ரெயிலானது ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது.
தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி -திருச்சி. தாம்பரம் சந்திரகாச்சி, நாகர்கோவில் ஜல்பாய்குரி இடையே அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், அம்ரித் பாரத் ரெயில்கள் புறப்படும் நேரத்தை ரெயில்வே வெளியிட்டுள்ளது.
விடுமுறை தினம் : திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வள்ளுவப் பெருந்தகையின் புகழை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்
வள்ளுவப் பெருந்தகையின் புகழை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மாட்டுப்பொங்கல் - தஞ்சை பெரிய கோயிலில் கோ பூஜை
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்பட்டது. பிரம்மாண்டமான நந்தி சிலைக்கு ஒரு டன் எடைக்கு மேல் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல்: தொகுதி பங்கீட்டில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. வைத்த 'செக்'
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக 50 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு வற்புறுத்துவதாக சொல்லப்படுகிறது.
துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு காளை சிற்பத்தை பரிசளித்தார் நடிகர் சூரி
பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு நடிகர் சூரி காளை சிற்பத்தை பரிசளித்தார்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
இன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல்
பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய தூதரக அறிவுறுத்தி உள்ளது.
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர் வாசு
2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக வாசு போட்டியிட்டார்.
சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.