மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை..... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இல்லத்தரசிகள் கலக்கம்
தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ,82,240க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை உயர்வு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்த இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளி விலையும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Update: 2025-09-16 04:29 GMT