4 கூட்டணிகள் 2026 சட்டமன்ற தேர்தலில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

 4 கூட்டணிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் - டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி


தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

அதிமுக தோற்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். 4 கூட்டணிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும். இந்த முறை எடப்பாடி பழனிச்சாமி தோற்க நாங்கள் காரணமில்லை.

தமிழக மக்கள் முட்டாள் அல்ல, அதிமுக ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக கூறுவது தவறு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்களே தவிர பாஜக அல்ல. சசிகலாவின் பேச்சைக் கேட்டுத்தான் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர் 122 எம்.எல்.ஏக்கள் சசிகலா சொன்னதால் தான் வாக்களித்தனர்.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் பழனிசாமி முதல்-அமைச்சரானார். ஆனால், தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார். ஈபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. துரோகத்தை தவிர ஈபிஎஸ்-க்கு வேறு எதுவும் தெரியாது. 

இவ்வாறு அவர் கூறினார். 

Update: 2025-09-16 05:49 GMT

Linked news