இந்தியாவுக்கு சவால் அளிக்கும் அணியாக பாகிஸ்தான்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
இந்தியாவுக்கு சவால் அளிக்கும் அணியாக பாகிஸ்தான் இல்லை - கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில்,
'பாகிஸ்தான் அணி நமக்கு இணையான தரம் கொண்ட அணியாக இல்லை. நான் அவர்களின் கடந்த கால அணியை பார்த்து இருக்கிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணியின் தரம் குறைந்துள்ளது. நீண்ட காலமாக நட்சத்திர வீரர்களாக வலம் வந்த விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி விளையாடுகிறது. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மற்றும் இந்த ஆசிய கோப்பையில் பங்கேற்றுள்ள மற்ற அணிகளை விட இந்தியா வெகுதூரம் முன்னிலையில் இருக்கிறது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Update: 2025-09-17 04:51 GMT