உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு


உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகள், வீடுகள் சேதம் அடைந்தன. டேராடூனில் நேற்று அதிகாலை ஒரு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படை நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில் டேராடூன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.


Update: 2025-09-17 04:57 GMT

Linked news