ஓசூரில் நாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
ஓசூரில் நாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தெரு நாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோட்ட கூலித் தொழிலாளி முனி மல்லப்பா(50) என்பவர் உயிரிழந்தார்,
முன்னதாக தனியார் தோட்டத்தில் வேலைபார்த்த முனி மல்லப்பாவை அங்கு வந்த தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு நேற்று மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முனி மல்லப்பா உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-09-17 08:14 GMT