பெரியார் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதைதந்தை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
பெரியார் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை
தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை 'சமூக நீதி நாள்' ஆக தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை பனையூரில் அக்கட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Update: 2025-09-17 08:22 GMT