நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சி சார்பில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். இதன்பின்னர் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய வேண்டுமென்றால், ஆத்மநிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) என்பதே அதற்கான வழியாகும் என பேசியுள்ளார்.

Update: 2025-09-17 12:02 GMT

Linked news