சென்னை - பெங்களூரு டபுள் டக்கர், கோவை ரெயில்களில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

சென்னை - பெங்களூரு டபுள் டக்கர், கோவை ரெயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை சென்டிரல் - பெங்களூரு இடையே டபுள் டக்கர் ரெயில் (வண்டி எண் 22625/22626) இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் ரெயிலில் வரும் 22-ந் தேதி முதல் கூடுதலாக 2 இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பெங்களூருவில் இருந்து 23-ந் தேதி முதல் இதேபோல் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும்.

இதேபோல், பெங்களூரு - கோவை இடையே இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் வரும் 22-ந் தேதி முதல் கூடுதலாக 2 இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Update: 2025-09-17 15:06 GMT

Linked news