புதுச்சேரி சட்டசபையில் சலசலப்பு: தி.மு.க.,... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
புதுச்சேரி சட்டசபையில் சலசலப்பு: தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்
புதுச்சேரி சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். குடிநீரில் கழிவுநீர் கலந்தது குறித்து அவையில் விவாதிக்க திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை வலியுறுத்தி அவையில் முழக்கமிட்டு சபாநாயகரை சூழ்ந்து எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். சபாநாயகர் அறிவுறுத்தியும் கேட்காத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்டோர் குண்டுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
Update: 2025-09-18 05:28 GMT