இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-09-18 08:58 IST


Live Updates
2025-09-18 14:59 GMT

16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, நாமக்கல், சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், சேலம், கடலூர், விழுப்புரம், கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-09-18 13:59 GMT

சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் லேசான மழையும், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் போன்ற புறநகர் பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

2025-09-18 13:43 GMT

47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தகவல், தமிழக அரசு நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டு உள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2025-09-18 13:09 GMT

வார இறுதி நாள்: சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கம்- எஸ்.இ.டி.சி அறிவிப்பு

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 2 நாட்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன், கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. அதன்படி இந்த 2 நாட்களும் மொத்தம் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (19-ஆம் தேதி) 355 சிறப்பு பஸ்களும், வருகிற 20-ஆம் தேதி 350 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

2025-09-18 13:03 GMT

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

2025-09-18 12:28 GMT

நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடித்த “ரைட்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

அறிமுக இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி எனும் நட்ராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடித்துள்ள படம் 'ரைட்’.இது திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இதில் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

வீரம் படத்தில் இடம்பெற்ற குழந்தை நட்சத்திரம் யுவினா பார்தவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ள இந்தப் படம். காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை ஏற்பட்டால் என்னவாகும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் ஒரு கமர்ஷியல் திரில்லர் ஆகும். 'ரைட்' படம் வருகிற 26ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2025-09-18 11:50 GMT

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்: தவெக வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

த.வெ.க. தலைவர் விஜய் டிசம்பர் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

திருச்சியில் நடந்த பிரசாரத்தின் போது போலீஸ் தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள். போராட்டங்கள், ரோடு ஷோ போன்றவைகளுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பது இல்லை. ஆனால், எங்களது கட்சிக்கு மட்டும் போலீசார் கடுமையான நிபந்தனைகள் விதிக்கின்றனர். எனவே, விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை பாரபட்சமின்றி பரிசீலித்து அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி டி.ஜி.பி.க்கு ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

2025-09-18 11:36 GMT

அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை புதுக்கோட்டை தஞ்சாவூர், ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, வேலூர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-18 11:01 GMT

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் - உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இன்றைய தினம், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி மண்டலம் -15, வார்டு 195, துரைப்பாக்கத்தில் நடைபெற்ற முகாமுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்தோம்.

பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று முகாமில் இருந்த பணியாளர்களை அறிவுறுத்தினோம். முகாம் குறித்த பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்றோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2025-09-18 09:58 GMT

சேலம், ஆத்தூர் அருகே துலுக்கனூரில் நிலம் அளவீடு செய்வதற்காக ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் ஜீவிதா மற்றும் அவரது உதவியாளர் கண்ணதாசன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்