கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து நீக்கி உள்ளனர் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-
வாக்கு திருட்டை மறைக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார். அவருக்கு எதிராக எங்களிடம் ஆதாரம் உள்ளது. ஆதாரமின்றி எதையும் கூறவில்லை. எதிர்க்கட்சி என்பதால் முழு ஆதாரத்துடன்தான் கூறுகிறேன்.
கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து நீக்கி உள்ளனர். வெளிமாநில செல்போன் எண்களை பயன்படுத்தி கர்நாடக வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. கோதாபாய் என்ற பெயரில் போலியாக ஒரு Login-ஐ உருவாக்கி 12 வாக்காளர்களை நீக்க விண்ணப்பித்து உள்ளார். ஆனால் தனது பெயரில் விண்ணப்பம் அளித்தது தெரியாது என கோதாபாய் பேட்டி அளித்துள்ளார்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.