டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்து அதிமுகவில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்து அதிமுகவில் நுழைந்தார் - எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்து அதிமுகவில் நுழைந்தார். 10 ஆண்டுகள் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார்.

NDA கூட்டணியில் இருப்பதாகவும், கூட்டணியின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் ஏற்கெனவே டிடிவி தினகரன் தெரிவித்த கருத்து ஊடகங்கள் வாயிலாக வந்தது. தற்போது திடீரென கருத்தை மாற்றிக் கொண்டார்.

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என அமித்ஷா ஏற்கெனவே கூறிவிட்டார்.

ஒரு முதல்-அமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார், இவ்வாறு பேசுவது அவருக்கு அழகல்ல. கடந்த 16 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருந்து காரில் வெளியே வரும்போது என் முகத்தை துடைத்தேன். அதை எடுத்து அரசியல் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-09-18 06:33 GMT

Linked news