சென்னை புறநகர் பகுதிகளில் கனமழைதென்னிந்திய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் லேசான மழையும், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் போன்ற புறநகர் பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Update: 2025-09-18 13:59 GMT