செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் அன்புமணி? - பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று ஆலோசனை
பாமக நிறுவனர் ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கைக்கு, 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் பாமக தலைவர் அன்புமணி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாமக தலைவர் அன்புமணி பதிலளிக்காத நிலையில், செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவது தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து தைலாபுரத்தில் இன்று பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-19 07:19 GMT