2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி... மாநில மந்திரிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி... மாநில மந்திரிகள் குழு நாளை ஆலோசனை
6 பேரை கொண்ட மாநில மந்திரிகள் குழு கூட்டம் நாளையும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. அதில், 2 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. மாற்றப்படுவது பற்றி குழு ஆலோசனை நடத்துகிறது.
மத்திய அரசு இக்குழுவில் இடம்பெறவில்லை. இருப்பினும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை மந்திரிகள் குழு நன்றாக புரிந்து கொள்ளவும், சீர்திருத்தத்தின் பின்னால் உள்ள சிந்தனையை தெரிந்து கொள்ளவும் நிர்மலா சீதாராமன் உரை உதவும் என்று கருதப்படுகிறது.
Update: 2025-08-19 08:17 GMT