கிட்னி விற்பனை விவகாரம் - ஐகோர்ட்டு மதுரை கிளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

கிட்னி விற்பனை விவகாரம் - ஐகோர்ட்டு மதுரை கிளை காட்டம்


சட்டவிரோத கிட்னி விற்பனை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏழை, எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை என்று ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Update: 2025-08-19 08:23 GMT

Linked news