எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திக்கொள்வது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து கூறியதாவது:-
ஒரு பழமொழி சொல்வார்கள் “அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய்’ என்பதுபோல, அவருக்கு ஆம்புலன்ஸை பார்த்தால் வேறு ஏதோ நினைவு வருகிறதுபோல. ஒரு முன்னாள் முதல்-அமைச்சர் இப்படி மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல். இப்படி பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதுதான் நல்லது. இப்படி பேசுவதால் அவருக்குதான் எதிர்ப்பு அதிகமாகும். ஆம்புலன்சை வேண்டுமென்றே அனுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-08-19 09:42 GMT