மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: சிறப்பு குழு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: சிறப்பு குழு அமைக்க கோர்ட்டு உத்தரவு
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில், சொத்து வரி சரியாக நிர்ணயம் செய்திருப்பதை உறுதிப்படுத்த சிறப்புக் குழுக்களை அமைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி விளக்கம் அளிக்கையில், “கடந்த 15 ஆண்டுகளாக முறைகேடுகளை குறித்து சிறப்பு குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை விசாரணையில் ரூ.2 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அனைத்து வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, கைது நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.
Update: 2025-08-19 10:19 GMT