வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இருசக்கர வாகனம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இருசக்கர வாகனம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கனமழை காரணமாக சிம்லா பைபாஸ் சாலையில் தரைபாலத்தை கடந்து வெள்ளம் பாய்ந்தோடியது. அப்போது, பாலத்தை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் வெள்ளத்தின் வேகத்தில் கீழே விழுந்தது. விபரீதத்தை உணராத அப்பகுதி இளைஞர்கள், வாகனத்தை மீட்க முயன்றனர். 5 இளைஞர்கள் ஒன்றிணைந்து வாகனத்தை மீட்க முயன்றபோதிலும், ஆர்ப்பரித்துச் சென்ற வெள்ளம் வாகனத்தை இழுத்துச் சென்றது.

Update: 2025-08-19 10:38 GMT

Linked news