நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு விஷால்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு விஷால் இரங்கல்
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு விஷால் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Update: 2025-09-19 07:41 GMT