இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
''என்னைப்போல யாரும் அந்த கஷ்டத்தை அனுபவிக்கக்கூடாது'' - பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டில் இருந்து இப்போது உலகளாவிய நட்சத்திரமாக மாறி இருப்பவர் பிரியங்கா சோப்ரா. கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது மகேஷ் பாபு-ராஜமவுலி கூட்டணியில் உருவாகி வரும் எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.
''சக்தி ஷாலினி'' படத்தில் கியாரா அத்வானிக்கு பதில் அனீத் பத்தாவா?
நடிகை அனீத் பத்தா, 'சக்தி ஷாலினி' என்ற ஹாரர்-காமெடி படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதில் அளித்துள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னை நகர்ப்புற பகுதிகளிலும், வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தற்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி தி.நகர் மாம்பலம், அன்னாசாலை தேனாம்பேட்டை, காட்டுப்பாக்கம் திருவேற்காடு, ஆவடி, திருமுல்லைவாயல், தொழிற்பேட்டை, போரூர் வளசரவாக்கம், வானகரம், மதுரவாயல், ஐயப்பந்தாங்கல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், பட்டாபிராம், மாங்காடு, குன்றத்தூர், அம்பத்தூர், கொரட்டூர், பாடி, செண்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம்
வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவன் நகர் மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 இந்திய படங்கள்
தற்போது திரையரங்கிற்கு போய் படம் பார்த்த காலம் போய், வீட்டிலேயே ஓடிடி மூலம் குடும்பத்துடன் மொழிகளுக்கான தடைகளை தாண்டி பிடித்த படங்களை பார்த்து மகிழ்வதோடு, அனைத்துவிதமான ஜானர் படங்களையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில், தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 இந்திய படங்களை காண்போம்.
''வேறு யாரையும்போல வாழ முயற்சிக்காதீர்கள்'' - விஜய் தேவரகொண்டா
லிட்டில் ஹார்ட்ஸ் படத்தின் வெற்றி விழாவில் , நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
ரோபோ சங்கரின் உடல் அவர் வீட்டில் உறவினர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது, அவரின் இறுதிச் சடங்கு ஊர்வலம் தொடங்கி உள்ளது.
''ஜனநாயகனில் இதையெல்லாம் எதிர்பார்க்கலாம்'' - இயக்குனர் எச்.வினோத்
ஒரு விழாவில் பேசிய இயக்குனர் எச்.வினோத் விஜய்யின் ஜனநாயகன் பட அப்டேட்டை பகிர்ந்துகொண்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.