தேர்தலில் சீட் மறுப்பு; லாலு பிரசாத் வீட்டின்முன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
தேர்தலில் சீட் மறுப்பு; லாலு பிரசாத் வீட்டின்முன் கண்ணீர் விட்டு அழுத கட்சி நிர்வாகி
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இதில், மதுபன் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளராக அந்த தொகுதியை சேர்ந்த மூத்த நிர்வாகி மதன் ஷாவுக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிட மதன் ஷாவுக்கு சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக சந்தோஷ் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த மதன் ஷா இன்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
Update: 2025-10-19 11:19 GMT